Friday, August 13, 2010

ஜானி நடப்பவனின் கேள்விகள்..

13.08.2010

டியர் அம்சவல்லி,

உங்கள் வலைப் பக்கம் வந்து போனாலே அந்த நாள் எனக்கு இனிய நாளாக அமைகிறது. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும், என்னைப் போன்ற பல ரசிகர்கள் இங்கே அண்டார்ட்டிக்காவில் உள்ளனர். உங்கள் எழுத்துக்களைப் பார்த்தாலே இங்கே பனி உருகுகிறது. உங்கள் போட்டோவைத்தான் நாங்கள் ஸ்வெட்டராகப் பின்னிக்கொண்டிருக்கிறோம். எனக்கு ஜல்ஸாவிஸ்கியை விட உங்கள் எழுத்துக்களே சூடேற்றுகிறது.

அன்புடன்.


ஐஸ்பாய்.


அன்புள்ள ஐஸ்பாய்,

பனியில் விறைத்துச் செத்தாலும் நீங்கள் என் பதிவைப் படிப்பது என்பது முன்பே எழுதப்பட்ட ஒன்றுதான். ஆனால் ஜல்ஸாவெஸ்கியைப் பற்றி எழுதியுள்ளதால் நான் சில விஷயங்களை உங்களுக்குச் சொல்லவேண்டியுள்ளது. ஆனாலும் இப்பொழுது நான் காக்ராவுக்கு பால்ஸ் அடிக்க டைய்லரிடம் செல்லவேண்டும். ஒரு நாளைக்கு பேப்பர் படிப்பதற்கே எனக்கு 20 மணி நேரம் ஆகிறது.

நன்றாக வெயில் அடிக்கும்போது எனக்கு முதல் வகுப்பு ஏசியில் டிக்கெட் அனுப்பவும் வருகிறேன்.

அன்புடன்


அம்சவல்லி.

பி,கு. என்னைக் கண்டுபிடிக்க இராமசாமி கண்ணன் என்பவர் மிகவும் பிரயத்தனப் படுகிறார். அடுத்த கடிதம் அவருக்கு எழுதலாம் என்று இருந்தேன் அதற்குள் அவர் என்னுடைய அக்கவுண்ட் நம்பரை மெயில் பண்ணச் சொல்லி இருக்கிறார். எனவே இப்பொழுதைக்கு அதை தள்ளி வைக்கிறேன்..

--------

டியர் அம்சவல்லி,

இது போன்ற கடுதாசிகள் அனுப்புவதை என் தாத்தா ஒருவர் தினமும் செய்வார் சுமாராக ஒரு நாளைக்கு பத்தாயிரம் கடிதங்கள் அவர் அனுப்புவதைப் பார்த்திருக்கிறேன். ஏன் அவர் இப்படி அனுப்புகிறார் என்பது எனக்குப் புரியவே இல்லை.

சாகும் தருவாயில்தான் அவரிடம் இதைப் பற்றிக் கேட்டேன். ஏன் இத்தனைக் கடிதங்கள் என்று..

அவர் என்ன சொல்லி இருப்பார் அம்சா? உங்களுக்கு ஏதாவது ஐடியா உண்டா?


இப்படிக்கு,


ஜானி நடப்பவன்.
ஸ்பெயின்.



அன்புள்ள ஜானி நடப்பவன்,


உங்கள் தாத்தா போஸ்ட் மேனாக இருந்திருப்பார்.


அன்புடன்,


அம்சவல்லி.

பி.கு. உங்கள் பெயரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒரு 10 லிட்டர் அனுப்பி வைக்கவும்.

Thursday, August 12, 2010

வாசகர் கடிதம் - 13 ஆகஸ்ட் 2010

10.11.2010.

டியர் அம்சவல்லி,

நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். நீங்கள் பிரபல ஆண் பதிவர்தானே? ஏன் இந்தப் பெயரில் ஹாலிபாலியின் பக்கத்தில்வந்து கமெண்ட் போடுகிறீர்கள். உங்களுக்கு வெட்கமாய் இல்லையா?

அன்புடன்,

கோயிஞ்சாமி.
எகிப்து - 01.


______________________________________________________________________________

டியர் கோயிஞ்சாமி,

எனக்கு கண்ணே மணியே என்று வரும் கடிதங்களை விட இம்மாதிரிக் கடிதங்கள்தான் எரிச்சலைத் தருகின்றன. நீங்களே என்னைப் பிரபல பதிவர் என்று சொல்லிவிட்டீர்கள். பிறகு நான் ஏன் பாலாவின் பக்கத்தில் வேறு பெயரில் பதிலளிக்க வேண்டும். ஏதும் வசை பாடுபவர்கள்தானே அப்படிச் செய்வர்? நான் எதுவும் அப்படிச் செய்யவில்லையே உங்கள் லாஜிக் இடிக்கிறது. எதற்கும் நீங்கள் சற்று யோசித்து இனி கடிதம் எழுதுங்கள்.


உங்கள் நாய்க்கு இனி ஃப்ரீ வைத்தியம் பார்க்க நான் மாட்டேன்.

உங்களுக்குச் சில கேள்விகள்..

நீங்கள் எதிர்ப்பிலேயே வாழுங்கள் என்ற ஓஷோவின் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?

குறைந்த பட்சம் ப்ரீபெய்ட் செல் போன் அப்ளிகேஷனையாவது படித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நான் ராஜ் புத் என்றாலும் கொன்கன் ஏரியாவில் வசிக்கிறேன். கொங்கனியில் ’மிட்டாய்’ என்றால் அர்த்தம் தெரியுமா? நான் அப்படித்தான் கோவாவில் என்னைச் சீண்டுபவர்களைப் பார்த்துக் கூப்பிடுவேன். உங்களின் மேற்கண்ட கடிதம் அப்படித்தான் இருக்கிறது.

இப்படிக்கு,
அம்சவல்லி.

பி.கு: இனி வாசகர் கடிதங்கள் இங்கே தொடர்ந்து வெளியிடப்படும்.

Wednesday, August 11, 2010

கூடி கும்மி அடிக்கலாம் வாங்க!

தலை சிறந்த மொக்கைகளின் கனவுக் கூடாரம் இது. கூடி கும்மி அடிக்கலாம். கலாய்க்கலாம்.




ஒரே கண்டிஷன் நேரடி ஆபாசம், தனி நபர் தாக்குதல் வேண்டாம். சும்மா ஜாலிக்கு கமென்ட்டலாம் வாங்க!