Friday, August 13, 2010

ஜானி நடப்பவனின் கேள்விகள்..

13.08.2010

டியர் அம்சவல்லி,

உங்கள் வலைப் பக்கம் வந்து போனாலே அந்த நாள் எனக்கு இனிய நாளாக அமைகிறது. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும், என்னைப் போன்ற பல ரசிகர்கள் இங்கே அண்டார்ட்டிக்காவில் உள்ளனர். உங்கள் எழுத்துக்களைப் பார்த்தாலே இங்கே பனி உருகுகிறது. உங்கள் போட்டோவைத்தான் நாங்கள் ஸ்வெட்டராகப் பின்னிக்கொண்டிருக்கிறோம். எனக்கு ஜல்ஸாவிஸ்கியை விட உங்கள் எழுத்துக்களே சூடேற்றுகிறது.

அன்புடன்.


ஐஸ்பாய்.


அன்புள்ள ஐஸ்பாய்,

பனியில் விறைத்துச் செத்தாலும் நீங்கள் என் பதிவைப் படிப்பது என்பது முன்பே எழுதப்பட்ட ஒன்றுதான். ஆனால் ஜல்ஸாவெஸ்கியைப் பற்றி எழுதியுள்ளதால் நான் சில விஷயங்களை உங்களுக்குச் சொல்லவேண்டியுள்ளது. ஆனாலும் இப்பொழுது நான் காக்ராவுக்கு பால்ஸ் அடிக்க டைய்லரிடம் செல்லவேண்டும். ஒரு நாளைக்கு பேப்பர் படிப்பதற்கே எனக்கு 20 மணி நேரம் ஆகிறது.

நன்றாக வெயில் அடிக்கும்போது எனக்கு முதல் வகுப்பு ஏசியில் டிக்கெட் அனுப்பவும் வருகிறேன்.

அன்புடன்


அம்சவல்லி.

பி,கு. என்னைக் கண்டுபிடிக்க இராமசாமி கண்ணன் என்பவர் மிகவும் பிரயத்தனப் படுகிறார். அடுத்த கடிதம் அவருக்கு எழுதலாம் என்று இருந்தேன் அதற்குள் அவர் என்னுடைய அக்கவுண்ட் நம்பரை மெயில் பண்ணச் சொல்லி இருக்கிறார். எனவே இப்பொழுதைக்கு அதை தள்ளி வைக்கிறேன்..

--------

டியர் அம்சவல்லி,

இது போன்ற கடுதாசிகள் அனுப்புவதை என் தாத்தா ஒருவர் தினமும் செய்வார் சுமாராக ஒரு நாளைக்கு பத்தாயிரம் கடிதங்கள் அவர் அனுப்புவதைப் பார்த்திருக்கிறேன். ஏன் அவர் இப்படி அனுப்புகிறார் என்பது எனக்குப் புரியவே இல்லை.

சாகும் தருவாயில்தான் அவரிடம் இதைப் பற்றிக் கேட்டேன். ஏன் இத்தனைக் கடிதங்கள் என்று..

அவர் என்ன சொல்லி இருப்பார் அம்சா? உங்களுக்கு ஏதாவது ஐடியா உண்டா?


இப்படிக்கு,


ஜானி நடப்பவன்.
ஸ்பெயின்.



அன்புள்ள ஜானி நடப்பவன்,


உங்கள் தாத்தா போஸ்ட் மேனாக இருந்திருப்பார்.


அன்புடன்,


அம்சவல்லி.

பி.கு. உங்கள் பெயரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒரு 10 லிட்டர் அனுப்பி வைக்கவும்.

5 comments:

  1. ஹாலி பாலியின் தளத்தில் கவிதை ஒன்றை படைத்துள்ளேன் அம்சு. அங்கே வந்து உங்கள் மேலான கும்மிகளை அடித்திட வேண்டுகிறேன் ..
    இங்கனம் பிரியா பிரேமத்துடன்,

    அன்பன் இராமசாமி கண்ணண்.

    ReplyDelete
  2. கண்ணே அம்சு. இந்த இராமசாமி எப்ப பார்த்தாலும் மொதல்ல வந்துடுறாரு.

    இவருக்கு இனிமா கொடுப்போமா தோழி. உனக்காக என் ப்ரொஃபைல் படத்தையே மாற்றியுள்ளேன் தோழி.

    ReplyDelete
  3. //எனக்கு ஜல்ஸாவிஸ்கியை விட உங்கள் எழுத்துக்களே சூடேற்றுகிறது.//

    எனக்கு உங்க பேரு படிக்கும்போதே அந்த எஃபெக்ட் வருதுங்க.

    ReplyDelete
  4. எனக்கு உங்க பேரு படிக்கும்போதே அந்த எஃபெக்ட் வருதுங்க. ////

    ஏன் எனக்குமட்டும் ஒண்ணுமே வரல ????

    ReplyDelete
  5. அஹ‌ம‌து இர்ஷாத்April 4, 2012 at 12:32 PM

    கலக்கல்ங்க.... சூப்பர்... உங்களுக்கு நானும் ஒரு ‘வாசகர்’ கடிதம் ஜப்பான்லேர்ந்து எழுதுறேன்... :))

    ReplyDelete