Thursday, August 12, 2010

வாசகர் கடிதம் - 13 ஆகஸ்ட் 2010

10.11.2010.

டியர் அம்சவல்லி,

நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். நீங்கள் பிரபல ஆண் பதிவர்தானே? ஏன் இந்தப் பெயரில் ஹாலிபாலியின் பக்கத்தில்வந்து கமெண்ட் போடுகிறீர்கள். உங்களுக்கு வெட்கமாய் இல்லையா?

அன்புடன்,

கோயிஞ்சாமி.
எகிப்து - 01.


______________________________________________________________________________

டியர் கோயிஞ்சாமி,

எனக்கு கண்ணே மணியே என்று வரும் கடிதங்களை விட இம்மாதிரிக் கடிதங்கள்தான் எரிச்சலைத் தருகின்றன. நீங்களே என்னைப் பிரபல பதிவர் என்று சொல்லிவிட்டீர்கள். பிறகு நான் ஏன் பாலாவின் பக்கத்தில் வேறு பெயரில் பதிலளிக்க வேண்டும். ஏதும் வசை பாடுபவர்கள்தானே அப்படிச் செய்வர்? நான் எதுவும் அப்படிச் செய்யவில்லையே உங்கள் லாஜிக் இடிக்கிறது. எதற்கும் நீங்கள் சற்று யோசித்து இனி கடிதம் எழுதுங்கள்.


உங்கள் நாய்க்கு இனி ஃப்ரீ வைத்தியம் பார்க்க நான் மாட்டேன்.

உங்களுக்குச் சில கேள்விகள்..

நீங்கள் எதிர்ப்பிலேயே வாழுங்கள் என்ற ஓஷோவின் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?

குறைந்த பட்சம் ப்ரீபெய்ட் செல் போன் அப்ளிகேஷனையாவது படித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நான் ராஜ் புத் என்றாலும் கொன்கன் ஏரியாவில் வசிக்கிறேன். கொங்கனியில் ’மிட்டாய்’ என்றால் அர்த்தம் தெரியுமா? நான் அப்படித்தான் கோவாவில் என்னைச் சீண்டுபவர்களைப் பார்த்துக் கூப்பிடுவேன். உங்களின் மேற்கண்ட கடிதம் அப்படித்தான் இருக்கிறது.

இப்படிக்கு,
அம்சவல்லி.

பி.கு: இனி வாசகர் கடிதங்கள் இங்கே தொடர்ந்து வெளியிடப்படும்.

9 comments:

  1. மேடம் நீங்கள் வெட்னரி டாக்டரா? எனக்கு ஒரு சின்ன சந்தேகம். மிருகங்களுக்கும் அறுவை சிகிச்சை செய்வார்களா?

    ReplyDelete
  2. ஒலகம் ஆயிரம் சொல்லும் ராசாத்தி. இதுக்கெல்லாமா பொங்குவாங்க?

    நானு அத்தனை ஊரை போனப் பதிவுல எரிச்சேனே.. ஒன்னுமே சொல்லல?? :( :( :(

    ReplyDelete
  3. நீங்க யாருன்னு எனக்கு தெரியும் :)

    ReplyDelete
  4. அதுக்குள்ள வாசகர் கடிதம்லாம் போட ஆரம்பிச்சாசா.. இது எதுல போய் முடியப்போதோ.. நடத்துங்க ராசா நடத்துங்க :)

    ReplyDelete
  5. அன்புள்ள எஸ்கே தங்கள் கேள்விக்குப் பதில்:

    ஆம்.
    மனிதர்கள்தான் மிருகங்களுக்கு அறுவை சிகிச்சை செய்கிறார்கள். மிருகங்கள் தங்களுக்குள் அவ்வாறு செய்வது இல்லை.

    ReplyDelete
  6. பாலா, நீங்கள் எரித்த புகையில் நான் என்னை தேவதையாகவே உணர்ந்தேன். மிக்க நன்றி.

    அன்பர் இராமசாமி உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டியதுதான்.

    ReplyDelete
  7. பி.கு: இனி வாசகர் கடிதங்கள் இங்கே தொடர்ந்து வெளியிடப்படும்.

    பார்க்கலாம்

    ReplyDelete
  8. வேண்டாம் கண்ணே.., உனக்கு வேறெதுவும் எழுதத் தெரியாது என இந்த விடலைகள் நினைத்து விடக் கூடும்.

    இலக்கியத்தின் நீ ஏற வேண்டியது எவரஸ்ட் என்பதை நினைவிருத்து.

    ReplyDelete
  9. கண்ணே... என் ப்ரொஃபைல் புகைப்படம் பிடித்திருக்கிறதா தோழி?

    ReplyDelete